Perambalur: In Esanai Government Higher Secondary School, under the leadership of Police S. P. Shyamala Devi, awareness about drug prevention was held!

 

 

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இதில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடம் போதைப்பொருள் தடுப்பு குறித்த துண்டு பிரசுங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி ஷ்யமளாதேவி மாணவர்களிடம் போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அதனை உபயோகிப்பவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்டுகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்கள்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் மதுவிற்கு அடிமையாதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் வாழ்வியலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், மாணவர்கள் சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 என்ற எண்ணைப்பற்றியும் அதில் எவ்வாறு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் (இடைநிலை) மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு ஆலோசகர் மருத்துவர் வனிதா மாவட்ட கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் எசனை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், எசனை ஊராட்சித் தலைவர் சத்யா பன்னீர்செல்வம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர் ஏற்படுத்தினர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்றல் மற்றும் ஊறல் போடுதல் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் இரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!