Perambalur in many places in the district for about an hour, rain
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் வட்டாரப் சுற்றுப் பகுதியில் இன்று காலை நல்ல மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேப்பூர் வட்டார சுற்றுப் பகுதிகளான வேப்பூர், பரவாய், நன்னை, நல்லறிக்கை, புதுவேட்டக்குடி, மற்றும் ஓலைப்பாடி, கல்லை, பெருமத்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று காலை சுமார் 7.15 மணி அளவில் பெய்யத் துவங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. சாலைகளில் வெள்ளம் திரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. மானவாரி பயிர் சாகுபடி செய்த உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றும், நாளையும் பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர், செட்டிக்குளம், அரும்பாவூர், கொளக்காநத்தம், பாடாலூர் பெரம்பலூர் உள்ளிட்ட பல சுற்று வட்டார கிராமங்களில் இரவிலோ, பகலிலோ மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.