Perambalur: In Maruthaiyar, 4 villagers blocked the road to protest the mixing of underground sewers!
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க திட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பதை, கண்டித்து 4 கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதனூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டரை, குரும்பபாளையம், ஆதனூர் ஆகிய 4 கிராம மக்களுக்கு சொந்தமான விவசாய விலை நிலங்கள் சுமார் 600 ஏக்கர் கொட்டரை நீர்த்தேக்கத்தை சுற்றி அமைந்துள்ளது. இந்நிலத்திற்கு சென்று வர பொதுமக்கள் மூங்கில் பாடி, ஒதியம் கிராம வழியாக விவசாய நிலத்திற்கு சென்று வருகிறார்கள். எனவே ஆதனூர் குரும்பாபாளையம் வரை விவசாய விலை நிலத்திற்கு சென்று வர தார் சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைத்து தர கோரி சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்றி தராமல் கிடப்பில் போட்ட தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கொட்டரை, ஆதனூர், குரும்பாபாளையம், பிலிமிசை கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டியும் கோசங்கள் எழுப்பினர். கொட்டரை ஆதனூர் குரும்பா பாளையம் கிராமம் நீர்த் தேக்கத்தின் உள்ளே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல போர்க்கால அடிப்படையில் பாதை அமைத்து கொடுக்க வேண்டும்
பெரம்பலூர் பாதாள சாக்கடை மருதையாற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் பெரம்பலூர் பாதாள சாக்கடையை சுத்திகரிப்பு செய்து விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
கொட்டரை குரும்பாபாளையம் ஆபத்தான வளைவுகளில் இரும்பு தடுப்பு வேலிகள் உடனடியாக அமைக்க வேண்டும், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வீடு கட்ட மணல் மற்றும் வண்டல் மண் அடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், கொட்டரை பிலிமிசை மருதையாற்றிலிருந்து இலுப்பைகுடி மருதையாறு ஆறு வரை மருதையாற்றை அகலப்படுத்தி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற வேண்டும்.
மருதையாறு நீர்த்தேக்கத்தில் சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற வேண்டும் நீர்த்தேக்கத்தில் உள்ளே பறவைகளுக்கு பாதுகாப்பாக திட்டு மேடு அமைக்க வேண்டும், மருதையாறு நீர்த்தேக்கத்தை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும், கொட்டடை மருதையாறு நீர்த்தேக்கத்தில் விரைவில் சுற்றுலா தளம் அமைக்க வேண்டும். கொட்டரை ஆதனூர் கிராமத்திற்கு பேருந்து வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.
நீர்தேக்கத்தில் உள்ளே உள்ள சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றி நிலம் கொடுத்த கிராம விவசாயிகளுக்கு ஏலத்தில் பங்கு பெற்று முன்னுரிமை அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் முன்னுரிமை சான்று கிடப்பில் உள்ள அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும், நீர்த்தேக்கத்திற்காக மூழ்கி போன கொட்டரை பெரியசாமி கோவில் மானிய நிதியை கொட்டரை கிராம பொது மக்களிடம் உடனடியாக வட்டியுடன் சேர்த்து ஒப்படைக்க வேண்டும்,
கொட்டரை ஆதனூர் குரும்பாபாளையம் பிலிமிசை ஆகிய நான்கு கிராமங்களுக்கும் ஆரோ வாட்டர் சிஸ்டம் பொருத்த வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், கொட்டரை ஆதனூர் பிலிமிசை குறும்பாபாளையம் ஆகிய நான்கு கிராமங்களிலும் மகளிருக்கு பாதுகாப்பாக கழிவறை வசதி கட்டி கொடுக்க வேண்டும், எங்கள் நான்கு கிராமங்களுக்கும் தினசரி தண்ணீர் வருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், நீர்த்தேக்கம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு எல்லைகள் அமைக்க வேண்டும். விரைவில் பணிகளை முடித்து பாசன பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் ஆனது முழுவதும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி, அரியலூர் – ஆலத்தூர் ரோட்டில் சாலைமறியலில் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தாசில்தார் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
இன்னும் 20 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற பணிகள் முன் எடுக்கப்பபடும் என உறுதி அளித்தின் பெயரில் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.