Perambalur: In the pouring rain, a bike collided with a lorry that was parked without diesel: A youth died!
சேலம் மாவட்டத்தில் இருந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலத்திற்கு டைல்ஸ் ஏற்றிக் கொண்டு
லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. லாரி பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டீசல் தீர்ந்த காரணத்தால் லாரி வழியில் நின்றது. லாரியை ஓட்டி வந்த டிரைவரான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மனகெதியை சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேசன் (38). டீசல் வாங்க அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டார். அப்போது, பின்னால் பைக்கில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் மணிவேல் (48) வந்த போது, புயல் மழை பெய்து கொண்டிருந்ததால், இரவில் லாரி நிற்பது தெரியாமல் லாரியின் பின்னால் மோதினார், இதில், மணிவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மணிவேலின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.