Perambalur: Independence Day Celebration; Collector Grace Pachuau hoisted the national flag and distributed welfare assistance.
பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், அரசு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடந்தது. கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, டி.ஆர்.ஓ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் எம் எல் ஏ. பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏ தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசிய கொடி நிறத்திலான பலுான்களையும் பறக்கவிட்டனர்.
தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இன்றைய நிகழ்வில், ஆயுதப்படை ஆய்வாளர் ஜெ.தங்கபாண்டி தலைமையில், முதலாம் படைப் பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் என்.சந்திரபோஸ் , இரண்டாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஏ.சீமான், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் எம்.பிரசன்னா, தீயணைப்பு படைக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.பூபதி, ஊர்காவல் படைக்கு உதவி படைப்பிரிவு தளபதிகள் யூ.ஆல்பர்ட், ராணி ஆகியோர் தலைமையேற்று வழி நடத்தினர்.
பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 86 பயனாளிகளுக்கு ரூ.64,07,000 மதிப்பீட்டிலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிக்கு ரூ.40,000 மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,900 மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.71,262 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.7,900 மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.17,60,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.1,24,960 மதிப்பீட்டிலும், மாவட்ட நீர்வடிப்பகுதி முகமை சார்பில், 01 பயனாளிக்கு ரூ.8,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டிலும், தாட்கோ மூலம் 03 பயனாளிகளுக்கு ரூ.30,00,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ. 15,90,000 மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில், 2 பயனாளிகளுகுகு ரூ.21,63,901 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.36,69,500 மதிப்பீட்டிலும், மீன்வளத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5,25,000 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 174 பயனாளிகளுக்கு ரூ.1,33,47,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 374 பயனாளிகளுக்கு ரூ.3,29,81,423 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏ வழங்கினர்.
பின்னர் 288 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, லெப்பைக்குடிக்காடு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமாந்துறை புனித ஆன்ட்ருஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீகௌதம புத்தர் சிறப்பு உயந்நிலைப் பள்ளி, பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகிய 06 பள்ளிகளிலிருந்து சுமார் 600 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சப் கலெக்டர் சு.கோகுல், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஆதவன், உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நகராட்சியில், அம்பிகாராஜேந்திரனும், குரும்பலூர் பேரூராட்சியில் சங்கீதாரவிச்சந்திரனும் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில், இன்று சுகத்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது.