Perambalur: Information about banned drugs can be reported; Collector Information.
பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தியினை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் கிராம நிருவாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சி செயலாளர், அங்கன்வாடி பணியாளர், நியாயவிலை கடை பணியாளர்கள், கிராம செவிலியர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய கிராம அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிராம அளவிலான கண்காணிப்புக் குழு வாரத்தில் ஒரு நாள் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணியளவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கூடி, கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாகவோ அல்லது இதர சமூக விரோத செயல்கள் தொடர்பாகவோ தகவல்கள் இருப்பின் அதனை சேகரம் செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, அலுவலர்கள் இணைந்து, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் மட்டுமே கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தியினை முற்றிலும் அழித்து, உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாமல் தடுத்திட முடியும். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை, மெத்தனால் மற்றும் எத்தனால் பரிவர்த்தனை மற்றும் கொண்டு செல்லப்படுவது குறித்த தகவல் கிடைப்பின் பொதுமக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
மேலும் மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண். 10581 என்ற எண்ணிற்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் தொடர்பு எண். 9444175000 என்ற எண்ணிற்கும், காவல் துறையினரின் Whatsapp No. 7904136038 என்ற எண்ணிற்கும், தகவல்களை தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் வழங்கிடுபவர் விவரம் மிகவும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.
மேலும் கள்ள மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஹாலோகிராம், லேபிள்கள், ஸ்டிக்கர்கள், வெற்று பாட்டில்கள், பாட்டில் மூடிகள் ஆகியவற்றை தயார் செய்யப்படும் இருப்பு வைக்கப்படும் இடங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் அது குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தை கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் இல்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.