Perambalur: Intensive treatment for a woman who set herself on fire in a family dispute!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி இந்திராணி (47). குடும்ப பிரச்சினையால், நேற்று மாலை திடீரென தனது உடலில் கடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் வேதனை தாங்க முடியாத இந்திராணி அலறி துடிதுடித்து சத்தமிட்டார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இந்திராணியை மீது எரிந்து கொண்டிருந்து தீயை அணைத்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.