Perambalur: International businessman Plus Max Founder DATO S PRAKADEESH KUMAR’s family gave Dothi and Sarees as Diwali gifts to the Comman People
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்த டத்தோ. பிரகதீஸ்குமார் மலேசியாவை தலைமையிடமாக கொண்டு, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் பிளஸ் மேக்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
பூலாம்பாடிக்கு பல்வேறு நலத்திட்டங்களை தனது சொந்தப்பணத்தில் செய்து வரும் இவர், பொங்கல், தீபாவளி கொண்டாடும் போது, தனது ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நல்ல எண்ணத்தில், ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு புடவையையும், பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் மற்றும் அவரது மனைவி ரந்தினி உள்ளிட்ட குடும்பத்தினர் பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி, பெரியம்மாபாளையம், வேப்படி, பாலக்காடு அரசடிக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இன்முகத்துடன் வழங்கினர்.
மேலும், உடல் உழைப்பு செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, தீபாவளி கை செலவிற்காக ரொக்கப் பணத்தையும் வழங்கினார். பெற்றுக் கொண்ட ஏழை – எளிய மக்கள் மனதார வாழ்த்தி சென்றனர்.