Perambalur: International seminar on cybersecurity at Roever College!
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியின் கணினியியல், கணினி தொழில்நுட்பவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் சார்பில் ‘International Seminar On Cyber Security (ISCS-2024)’ என்ற சர்வதேசக் கருத்தரங்கம் நடந்தது.
ரோவர் கல்வி நிறுவனத்தின் சேர்மன் கே. வரதராஜன் தொடங்கி வைத்து தலைமையுரை நிகழத்தினார். துணைத் தாளாளர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். முதல் அமர்வில் மலேசியாவின் கர்ட்டின் பல்கலைக்கழகத்தின், கணிப்பொறியியல் துறையின் மூத்தப் பேராசிரியர் வீரமணி சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர், ‘இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது, இணையப் பாதுகாப்புக்குரிய கருவிகள், அதன் பயன்கள் அதனால் ஏற்படும் விளைவுகள், அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி பேசினார்.
இரண்டாம் அமர்வில், சிறப்பு விருந்தினராக, சென்னையைச் சேர்ந்த கமாண்டர் எம்.ராமநாதன் குமார் கலந்து கொண்ட அவர், ‘இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவமும், அதன் வல்லுநர்களும்’என்ற தலைப்பில் தொழில் உட்குறிப்பு இணையப் பாதுகாப்பு, அவற்றின் எதிர்காலம், இணைய மிரட்டல், அதிலிருந்து விடுபடும் முறைகள் பேசினார்.
கல்லூரி (பொறுப்பு) முதல்வர் மற்றும் கணினி அறிவியல் & கணினி தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான எஸ். சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார். அறிவியல் புல முதன்மையர் எஸ். மணிமாறன் கலந்து கொண்டார். கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் பூங்கொடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கணினித்துறை, கணினித் தொழில்நுட்பவியல், கணினிப் பயன்பாட்டியல் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இக்கருத்தரங்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளின் கணினியியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறையைச் சேர்ந்த மாணவர்களும், ரோவர் கல்லூரியின் கணினியியல் துறையைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.