Perambalur: Jewelery theft from locked house; Mysterious gang! Police investigation!!
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள 2 வீடுகளில், பூட்டிய வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குமாதவி சாலையில் உள்ள ராஷினி நகரை சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா (48),
சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி – சர்மிளா (37) மகன் சபீக் அகமது (17) மகள் – சாபியா (9) மகன் – சப்வான் (4) ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். சர்மிளாவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவசரமாக நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் பூட்டை விட்டு, விருத்தாசலத்திற்கு சென்றுவிட்டு இன்று காலை சுமார் 8.45 மணி அளவில் வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பிரோவில் இருந்த 4 பவுன் வளையல், 3 3/4 பவுன் மதிப்பில் 4 தோடு, 3/4 பவுன் மதிப்பில் 2 மோதிரம் என மொத்தம் – 8 1/2 பவுனை
மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், பிச்சைமணி, செந்தில்ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாயை வரவழைத்து, மர்ம நபர்களின் தடயங்களை வைத்து கொள்ளையர்களை அடையாளம் பணியில் ஈடுபட்டுள்னர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கட்சியின் பதிவுகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல, அதே தெருவில் உள்ள சாகுல் ஹமீது (57). இவரது மனைவி பர்வீன் பானு கணவன் மனைவி இருவரும் சவுதியில் வேலை செய்கின்றனர். மகள் சகானா – கோயமுத்தூரில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரது வீட்டில் கொள்ளை முயற்சி செய்த மர்ம நபர்கள் வீட்டில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.