Perambalur: K. Kannapiran has taken charge as a new trustee on behalf of the Hindu religious charity department!

பெரம்பலூர் டவுன் 19வது வார்டு சங்குபேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயிலுக்கு இந்து அறநிலை துறை சார்பில், உதவிஆணையர் லட்சுமணன், செயல் அலுவலர் கோவிந்தராஜ், ஆய்வாளர் தீபலட்சுமி, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பம்பரை முறை சாரா புதிய அறங்காவலராக கா.கண்ணபிரான் தேர்வு செய்யப்பட்டார்.

முழு மனதோடு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பெரம்பலூர் மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் ஆ.கலியபெருமாள், முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், வழக்கறிஞர் தமிழ்செல்வன், கிராம காரியஸ்தர்கள் கா.சரவணன், சக்கரவர்த்தி, சுப்ரமணி, பெரியசாமி, ஹரி, அழகமுத்து, ரத்தினவேல், கனகராஜ், பெருமாள் ரவி ,மற்றும் கோயில் பூசாரி வெ. நீதிதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!