Perambalur: KN Arun Nehru MP inaugurated the joint water project worth Rs. 12.87 crores.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரஞ்சன்குடி கிராமத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் தேவையூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து ரூ.12.87 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம், அயன்பேரையூர் ஊராட்சியில் அயன் பேரையூர், பர்மா காலனி, தைக்கால் ஆகிய கிராமங்களும், தேவையூர் ஊராட்சியில் மங்களம், மங்களமேடு, ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களும் எறையூர் கிராமமும், வி.களத்தூர் ஊராட்சியில் வி.களத்தூர், காமராஜர் நகர், கீழச்சேரி, மேட்டுச்சேரி, மில்லத் நகர், வண்ணாரப்பூண்டி ஆகிய கிராமங்களும் திருவாலந்துறை கிராமமும், அகரம் கிராமமும் என ஆறு ஊராட்சிகளை சேர்ந்த 15 கிராமங்களில் வசிக்கும் 33,149 நபர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு தலா 55 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்க ஏதுவாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக அயன்பேரையூர் அருகே வெள்ளாற்றில் 3 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, வெள்ளாற்றின் தென்கரை அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்திலிருந்து 16.04 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ள 250 மில்லி மீட்டர் விட்டமுள்ள நெகிழ் இரும்பு குழாய் முதல் 90 மில்லி மீட்டர் விட்டமுள்ள உயர் அழுத்த நெகிழி குழாய்கள் ( HDPE pipe), நீர் உந்தும் குழாய்கள் 16.57கி.மீ நீளமும் அமைத்து, தற்பொழுது உள்ள 4 தரைமட்ட தொட்டிகள் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 5 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 33 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் ஏற்றப்பட்டு, ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்டுகிறது.
மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், தேவையூர் ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி நடராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ரத்தினத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.