Perambalur: Kothari Shoe Company occupying Thar Road; Request to stop!
பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அரசு சிப்காட் வேலைவாய்ப்பும், பொருளாதாரத்தை பெருக்குவதற்காக ( இந்தியாவில் பணம் இல்லை என்பதால்) தைவான் மற்றும் கோத்தாரி நிறுவனங்களுடன் இணைந்து .ஃபீனிக்ஸ் காலணி பூங்கா இன்று தொடங்கி உள்ளது.
இந்த நிறுவனம் பொதுமக்கள் ஆண்டாண்டு காலம் பயன்படுத்தி வந்த அரசுக்கு சொந்தமான தார் சாலையை கோத்தாரி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து, கட்டங்களை கட்டி வருகிறது. ஆனால் இந்த பாதையில் எறையூரில் இருந்து, நமையூர் மற்றும் கே.புதூர், கீழப்புலியூர், மங்களமேடு, தேவையூர் பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் கரும்பு உள்ளிட்ட விவசாய விளை பொருட்களையும் இந்த வழியாகத்தான் காலங்காலமாக எடுத்து சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பாதை தடை பட்டுள்ளதால் எறையூர் மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் தார்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டடிங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனநாயக நாட்டில், அரசியல் பின்புலமும், பணமும், ஆட்கள் பலமும் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்யாலாம் என்ற நிலை வந்து விடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தூங்குவதை போல நடிக்கும் எதிர்க்கட்சிகளையும், கூட்டணி கட்சிகளையும் பொதுமக்கள் கவனித்து கொண்டு தான் உள்ளார்கள்.