Perambalur: Kumbabishekam at Naranamangalam Nandikeswarar, Mariamman Temples!

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் உள்ள மந்தைவெளி விநாயகர், நடுத்தெரு விநாயகர், நல்லநாயகி உடனுறை நந்திகேசுவரர், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரத ராஜப்பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களான மாரியம்மன், நல்லசெல்லியம்மன், மல்லபிள்ளையார், செங்காமுனியார், முத்துவீரசாமி, கெங்கையம்மன், அய்யனார், மருதையான், பெரியாண்டவர் ஆகிய கோயில் உள்ளது. இக்கோயில்களில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்ததையொட்டி இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 18ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீ கெங்கையம்மன் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியர்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து 6.15 மணிக்கு ஸ்ரீமுத்துவீரசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 6.20 மணிக்கு ஸ்ரீ செங்காமுனிஅய்யர் கோயிலுக்கும், 6.35 மணிக்கு ஸ்ரீ மல்லபிள்ளையார் கோயி லுக்கும், 6.45 மணிக்கு ஸ்ரீ அய்யனார் கோயிலுக்கும், 7 மணிக்கு ஸ்ரீ நல்ல செல்லியம்மன் கோயிலுக்கும், 7.15 மணிக்கு ஸ்ரீ மருதையான் கோயிலுக்கும், 7.25 மணிக்கு ஸ்ரீ பெரியாண்டவர் கோயிலுக்கும், 9.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கும், 9.45 மணி முதல் 10.10 மணிக்குள் நல்லநாயகி உடனுறை நந்திகேஸ்வரர் கோயிலுக்கு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீ நல்லநாயகி உடனுறை ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, வரகுபாடி, நாட்டார்மங்கலம், ஆலத்தூர்கேட், இரூர், திருவளக்குறிச்சி, பாடாலூர், புதுக்குறிச்சி, காரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மகர்த்தா கந்தசாமி, கரைக்காரர்கள் ஆனந்த், முத்துக்குமார், செல்லதுரை, இளையராஜா, ராஜேந்திரன், பாண்டியன், பிச்சை, பாலா, மதுபாலன், செல்வராஜ், ராமராஜ், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் குமரகுருபரன், உதயன், சத்தியமூர்த்தி, ராஜேந்திரன், நடராஜ், கணக்குசாமி, பழனிவேல், செந்தில்முருகன், வைத்தியநாதன், தனசேகர், செல்வக்குமார், அசோக், ராஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாரணமங்கலம் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!