Perambalur: KV Schools National Level Cricket Tournament; Tamilnadu student silver medal!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சார்பில், நடைபெற்ற 53வது நேஷனல் லெவல் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் 23 அணிகள் கலந்து கொண்டது. தமிழ்நாடு அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் டெல்லி அணியும், தமிழ்நாடு அணியும் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 2ம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டம் கேந்திரிய வித்யாலயா பள்ளியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் சி ஆதிசேஷன் வெள்ளிப் பதக்கத்துடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகநாதன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மனோகர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.