Perambalur: Lawyers announce court boycott protest tomorrow!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க (Crl.) நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சக்கரவர்த்தி, சமூக விரோதிகளால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட தமிழக அரசை இச்சங்கம் வலியறுத்தி சங்க உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது. இருப்பதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!