Perambalur: Lawyers’ decides to boycott court work tomorrow!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் அவசர கூட்டம் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் கிறிஸ்டோபர் ஜோபியை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவத்தை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்றிட இச்சங்கம் வலியுறுத்தி கேட்டுகொள்கிறது. மேற்படி கொலை சம்பவத்தை கண்டித்து நமது சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்தும் 11.11.2024 திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் விலகியிருப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.