Perambalur: Lawyers protest extension demanding withdrawal of three new laws against people and implementation of old laws!

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்றது.

அதில், முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹிந்தி, சமஸ்கிருத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற்ற, ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி முப்பெரும் சட்டங்களை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டி பலமுறை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும், புதுடில்லியில் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் வழக்கறிஞர்களின் பெடரேசன் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியும் வழக்கறிஞர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றபடவில்லை.

எனவே, முப்பெரும் சட்டங்களை ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி நடைமுறைபடுத்த வேண்டி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் பொருட்டு 31-07-2024 புதன் கிழமை இன்று முதல் 03-08-2024 சனி வரை பணிகளிலிருந்தும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற சங்கத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உறுப்பினர்கள் அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியிருந்து , இன்று முதல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!