Perambalur: Leaflets distributed by AIADMK demanding resignation of DMK government!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் இன்று மாலை, குன்னம் பேருந்து நிலையத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். தமிழ்ச்செல்வன் தலைமையில், அதிமுகவினர் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
அப்போது, திமுக அரசு, தற்போது உயர்த்தி உள்ள மின்சார கட்டணம், ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு பருப்பு, பாமாயில் விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டு, தேக்கம் அடைந்ததர் பொதுமக்கள் கடும் அவதி, அதோடு, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் தடுக்க தவறியதாக கூறி அதிமுகவினர் குன்னம் பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். குன்னம் கடைவீதி மற்றும் பஸ் ஸ்டாண்டில் இருந்து பொதுமக்கள் வியாபாரிகளுக்கு, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
கழக அமைப்பு செயலாளர் வரகூர் அருணாசலம், முன்னாள் எம்பி சந்திரகாசி, மாவட்ட அமைப்பாளர் குன்னம் குணசீலன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், வேப்பூர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் செல்வமணி, சித்தளி செங்குட்டுவன், காரைத் தலைவர் கலையரசன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னம் இளங்கோவன், கீழப்புலியூர் ப. நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், மகளிர் அணியினர், வக்கீல் ராமசாமி, மருவத்தூர் வெள்ளையன் உள்ளிட்ட அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.