Perambalur: Lifelong thanks to Tamilnadu government for implementing old pension scheme; Teachers!

பெரம்பலூர்: தமிழ்நாடு பட்டதாரி -முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், பெரம்பலூர் மாவட்டக் கிளை சார்பில், முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில் மாவட்ட அமைப்பின் 51-ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா மாவட்டத் தலைவர் பா. சுந்தரபாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ம. அருண்குமார் மற்றும் மாவட்டப் பொருளாளர் கி.இலக்கியச் செல்வன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 2023-2024 ஆம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற 85 அரசு பள்ளி மாணவர்கள், 100 விழுக்காடு தேர்ச்சி அளித்த 370 பட்டதாரி ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் கலந்து கொண்டு பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார். எமது அமைப்பின் சிறப்புத் தலைவர் சுப்ரமணியன், மாநிலத் தலைவர் கி.மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் அ.சுந்தரமூர்த்தி, மாநிலப் பொருளாளர் ச.துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் கவுரவத் தலைவர் ஏ.வி.இ.பாபுவாணன் மற்றும் மாநில ஐ.டி. விங் தலைவர் பெ.ராஜ்குமார் உள்ளிட்டோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

பொதுத் தேர்தலில் (2021 – சட்டமன்ற பொதுத் தேர்தல்) திராவிட முன்னேற்ற கழக தேர்தல் கால அறிவிக்கையின் படி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (CPS) நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை (GPF) நடைமுறைபடுத்தி பல லட்சகணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களது வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட தமிழ்நாடு முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தும் வேளையில் எங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் கொண்டவர்களாவோம் என உறுதி அளிக்கின்றோம் என்றும்,

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தூய குடிநீர் (Purerified water) மற்றும் சுகாதாரமான கழிப்பறை (Toilet) வசதிகளை உறுதி செய்து கொடுக்கவும்,

2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை வெவ்வேறு காலங்களில் முறையான இன சுழற்சிமுறையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் (Consolidated Pay) நியமனம் செய்யப்பட்ட அனைத்துவகை ஆசிரியர்களையும், அவர்களது நியமன நாள் முதல் பணிவரன்முறை (Regularisation) செய்திட வேண்டுகிறோம் (எவ்வித பணப்பலனின்றி).

பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உய உயர்வுகளை (Promotions) வழங்கிடுவதற்குரிய தடைகளை உரிய நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைந்து வழங்கிட வேண்டுகிறோம்

அரசாணை எண்:37 நாள்:9.3.2020-ன்படி உயர்கல்விக்கான (Higher Education) ஊக்க ஊதியம் (Incentive) வழங்கிடவும், உயர் கல்வி பெற்றுள்ள அனைவருக்கும் ஊக்க ஊதியத்தை பழைய முறையில் (இரு வளருதியங்கள்) கணக்கிட்டு வழங்கிடவும் மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற்றதின் மீதுள்ள தணிக்கை தடைகளை (Audit objections) களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டியும், ஈட்டிய விடுப்பினை (EL) அரசிடம் ஒப்படைப்பு செய்து பணமாக்கிகொள்ள விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கிட வேண்டியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

பட்டதாரி ஆசிரியர் பா.கீதா, வரவேற்றார். பெரம்பலூர் வட்டச் செயலாளர் பி.குணாளன் நன்றி கூறினார். மாநில, மாவட்ட . வட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் 600 க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!