Perambalur: Lightning strike kills cow, 2 calves!

 

பெரம்பலூர் மாவட்டம், குரூர் அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. இவருக்கு சிறுவயலூர்-புது விராலிப்பட்டி செல்லும் சாலையில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை பசு மாடு மற்றும் 2 கன்று குட்டிகளை கொட்டகைக்கு உள்ளே கட்டிவிட்டு, இன்று காலை வழக்கம் போல் இன்று காலை பால் கறப்பதற்காக வயலுக்கு சென்று பார்த்த போது, கொட்டகைக்குள் மின்னல் தாக்கி பசுமாடும் மற்றும் 2 கன்று குட்டிகளும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வி.ஏ.ஓ-க்கு தகவல் தெரிவித்தார். மேலும், இன்று அதிகாலை பெய்த மழையின் போது மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!