Perambalur: Lorry driver surrenders in the case where the actress’s car driver died in an accident!

தமிழ் சின்னத் திரை நடிகை தேவிப்பிரியா தேனி படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து காரில் சென்றுக் கொண்டிருந்தார். காரில், முத்துகணேஷ் (40) என்பவரும், ஆக்டிங் டிரைவர் திவாகர் (36) என்பவரும் சென்றனர். காரை, சென்னை ஐயப்பன்தாங்கலை சேர்ந்த முத்துகணேஷ்(40) ஓட்டி சென்றார்.

கார், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சென்ற போது காரின் டயர் பஞ்சரானதால், சாலையோரமாக காரை நிறுத்தி, பஞ்சரான டயரை டிரைவர் முத்து கணேஷ், திவாகர் உதவியுடன் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்து கணேஷ் மீதும் திவாகர் இருவர் மீதும் மோதியது. இதில் டிரைவர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த திவாகர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த சீலமுத்து மகன் கிருஷ்ணன் என்பவர் சரண்டர் ஆனார். அப்போது, கவனக்குறைவு காரணமாக, காரின் மாற்றிக் கொண்டிருந்த முத்துகணேஷ், திவாகர் மீது மோதிவிட்டது. பயத்தினால் தப்பி ஓடியதாகவும், எப்படியும் போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், போலீசில் சரணடைந்தாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கயல்விழி, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!