Perambalur: Lorry-van collision; Devotees who went to Tiruchendur injured!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு டிராவல்ஸ் வேன் இன்று அதிகாலை ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 7 சிறுவர், சிறுமியர் உள்பட 22 பேர் இருந்தனர். வேனை பண்ருட்டியை கோவிந்தன் (35) ஓட்டி சென்றார். வேன், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராணிபேட்டையிலிருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல வேன் ஓட்டுநர் முயன்றார். அப்போது குறுக்கே கார் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த 15 பேர் காயமடைந்தனர். இது தகவலறிந்த பாடாலூர் போலீசார், விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.