Perambalur: LPG Iron Box for Laundry Workers : Collector Information!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 25.06.2024 அன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அத்துறை அமைச்சரால் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றவர்களுக்கு மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப புதிய முன்னெடுப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 1,200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சலவைத் தொழிலாளர்கள் தங்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள சலவைத் தொழிலாளர்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று பயனடையுமாறு கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திகக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.