Perambalur: Makkalai Thedi Maruthu Thittam ; 1,06,434 persons benefited in 3 years : Collector Grace Pachuau Information!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி மூன்றாண்டு நிறைவடைந்து, நான்காம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 115 மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏபிரபாகரன் முன்னிலையில் அஸ்வின்ஸ் உணவக கூட்ட அரங்கில் நடந்தது.

அனைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி என்ற கிராமத்தில் முதன்முதலாக தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனைகள் (NCD Screening), 45 வயதிற்கு மேற்பட்டு பரிசோதனைகள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு மாதாந்திர மாத்திரைகள் வழங்குதல், முடக்குவாதம் மற்றும் தசைமூட்டு சம்மந்தமான நோய்களுக்கு இயன்முறை சிகிச்சைகள் (Physiotherapy), புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான நோய் தணிப்பு (Palliative Care) சிகிச்சைகள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, வீட்டிலேயே Dialysis (CAPD) செய்து கொள்பவர்களுக்கு தேவையான CAPD Bags மற்றும் சிகிச்சைகள் வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 95 பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHV), 65 இடைநிலைச் சுகாதார செவிலியர்கள் (MLHP) மற்றும் 36 சுகாதார ஆய்வாளர்கள் (MTM-HI) பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இயன்முறை சிகிச்சை மற்றும் நோய்த்தணிப்பு சிகிச்சை வழங்க 4 வட்டாரங்களிலும், 4 மருத்துவக்குழுக்கள் வாகனங்களுடன் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சேவையை வழங்குகின்றனர்.

இதுபோன்ற மருத்துவ மக்கள் சேவை இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில்தான் மக்களின் வீடுகளுக்கேச் சென்று மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், இதுவரை உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 52,045 நபரகளுக்கும், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட 54,389 நபர்களுக்கும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் என 20,237 நபர்களுக்கும் சிக்சிக்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,674 நோயாளிகள் இயன்முறை சிகிச்சையும் (Physiotherapy Services), 1421 நோயாளிகள் நோய் தணிப்பு சிகிச்சையும் (Palliative Care Services) தங்களின் இல்லங்களிலேயே பெற்று பயனடைந்துள்ளனர். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு Positional Dialysis செய்து கொள்ளும் 2 நோயாளிகளுக்கு மாதந்தோறும் CAPD Bags வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகு சிறப்புவாய்ந்த மருத்துவ சேவைகளை மக்களின் வீடுதேடி சென்று வழங்கிடும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,06,434 பயனாளிகள் பல்வேறு வகையான சேவைகளை பெற்று பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும், மருத்தவர்கள், மருத்துவத் திட்ட பணியாளர்கள் மற்றும் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு வழங்கும் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது

பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப் குமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!