Perambalur: Makkaludan Muthalvar Thittam in Veppanthattai!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை காந்தி மஹாலில் வேப்பந்தட்டை மற்றும் அன்னமங்கலம் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்களுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம் இன்று நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அனைத்துத்துறைகளின் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தொடர்பான அரங்குகளை அனைவரும் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினர்.
இம்முகாமில் 270 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ்ணன், ஊராட்சித் தனலட்சுமி கலியமூர்த்தி (வேப்பந்தட்டை), மருதாம்பாள் செல்வகுமார் (அன்னமங்கலம்) உள்பட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.