Perambalur: Man arrested for trying to sell ganja to school children; Police action!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பந்தட்டை பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் சிற்றரசு மற்றும் அவரது குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சிறுவாச்சூரை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ரங்கராஜ் (35) என்பவரை விசாரணை செய்த போது அவர் பள்ளிக் குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தத அடுத்து, அவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் ) பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச் சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தெரிவிக்கலாம், தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.