Perambalur: Man dies after being hit by lorry while trying to cross road!
பெரம்பலூர் மாவட்டம், இரூர் அருகே உள்ள பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்லதுரை (55). தொழிலாளி. இவர் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, பெருமாள்பாளையத்திற்கு மீண்டும் வர திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கிழக்குப் பகுதியில் மேற்கு பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி செல்லதுரை மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக செல்லதுரையை கொண்டு போய் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சையின் போது அவர் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.