Perambalur: Man who married for love commits murder after 9 years?!! Police investigating!!

பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் வாலிபர் சேலைத் துணியால் கழுத்து இருக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார், அவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் வினோத்தின் உறவினர்கள் அடித்து கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி – லட்சுமி தம்பதியரின் மகன் வினோத்(30). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி – வள்ளியம்மை தம்பதியரின் மகளான கற்பகம் (28), என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களான வினோத்-கற்பகம் இருவரும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்கள் திருமணத்திற்கு வினோத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த வினோத்தின் உறவினர்களான குபேந்திரன் உள்ளிட்ட 5 பேர் அடிக்கடி வினோத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ரஞ்சன்குடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வினோத் சாப்பிடுவதற்காக சென்ற போது, அங்கு ஏற்கனவே, மது அருந்திக் கொண்டிருந்த குபேந்திரன் உள்ளிட்ட அவனது கூட்டாளிகள் வினோத்திடம் வீண் வம்பு செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த வினோத் அவர்களிடமிருந்து தப்பி ஓடிச்சென்று தன்னை காப்பாற்றிக் கொள்ள தனது வீட்டிற்குள் புகுந்த, அவர் வீட்டிற்குள் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அறிந்த வினோத்தின் மனைவி கற்பகம் உள்ளிட்ட குடும்பத்தார், வினோத்தை குபேரன் உள்ளிட்ட அவனது கூட்டாளிகள், ஓட ஓட விரட்டி வந்து அடித்து கொலை செய்து விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், மாற்று சமூகத்தை சேர்ந்த வினோத், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆத்திரம் தாளாமல் தங்கள் சமூகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டாய் என வினோத்தை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மங்கலமேடு போலீசார் வினோத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!