Perambalur: Mass Communication Project Camp in Chatramanai Village!
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில், எதிர்வரும் 09.10.2024 (புதன்கிழமை) அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, சத்திரமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சத்திரமனை கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.