Perambalur: MCP at Ayyanperaiyur: Collector distributed welfare assistance worth Rs 6.68 crore!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அயன்பேரையூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதில், வருவாய்துறையின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.11,00,000 மதிப்பீட்டிலும்,வருவாய் துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 63 பயனாளிகளுக்கு ரூ.8,00,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலும், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 89 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 158 பயனாளிகளுக்கு ரூ.5,56,50,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,380 மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.2,48,933 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.1,81,525 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.87,08,400 மதிப்பீட்டிலும், என மொத்தம் 436 பயனாளிகளுக்கு ரூ.6,68,78,688 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், அயன்பேரையூர் ஊராட்சித் தலைவர் ந.சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!