Perambalur: Medical camp at the court: Principal District Judge Balkees inaugurated!
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தனியார் கண் மருத்துவமனையும் இணைந்து மருத்துவ முகாம் நடத்தியது. அதனை, முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கிஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். தனியார் மருத்துவமனை பல் மருத்துவர் செல்வி, பிரபாகர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மகேந்திர வர்மா ஏற்பாடு செய்திருந்தார்.