Perambalur: Meeting led by SP regarding execution of court orders!
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடி கட்டளைகளை நிறைவேற்றுவது மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:
நீதிமன்றத்தில் பிடி கட்டளை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து நீதிமன்ற பிடிக்கட்டளையை நிறைவேற்றுவது குறித்தும், மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதில் ஏடி.எஸ்.பி மதியழகன் (தலைமையிடம்) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ரவுடிகள் கண்காணிப்பு குழு உதவி இன்ஸ்பெக்டர்கள், நீதிமன்ற காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.