Perambalur: Minister Sivashankar distributed blankets to those staying in rain relief camps!

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னம் வட்டத்திற்குட்பட்ட வீரமநல்லூர் வேள்விமங்கலம் மற்றும் ஒகளுர் கிராமங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட வீரமநல்லூர் மற்றும் வேள்விமங்கலம் கிராமங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நபர்களை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 நபர்களையும், வேள்விமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 நபர்களையும், ஒகளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 49 நபர்களையும் அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு முகாம்களில் உள்ள அனைவருக்கும் உணவு, தண்ணீர், பாய், உடை, போர்வைகளை வழங்கி முகாம்களில் அனைத்து அடிப்படை வசதிகளும், மழை நீர் வடிவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

பின்னர், வீரமநல்லூர், வேள்வி மங்கலம் மற்றும் ஒகளுர் கிராமங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு, பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு, மழை நீர் வடிவதற்கு ஏற்ப வடிகால் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மழைநீர் அகற்றுவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது ஒன்றிய சேர்மன் பிரபா செல்ல பிள்ளை, ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் மதியழகன், ஊராட்சித் தலைவர் அன்பழகன் ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!