Perambalur: Minister Sivashankar inaugurated the foundation stone laying ceremony and completed works worth Rs. 11.84 crore in Veppur union!

கீழப்புலியூர் – தேவையூர் செந்துறை சாலை பலப்படுத்தும் பணி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமாந்துறை, கீழப்புலியூர், சிறுகுடல், கே.புதூர், முருக்கன்குடி, பெருமத்தூர், பெ.குடிகாடு, ந.கிளியூர், நன்னை, பென்னகோணம், கழனிவாசல், ஒகளூர், புதுப்பேட்டை, அத்தியூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் கிரேஸ் தலைமையில், ரூ.11.84 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்தும் வைத்தார்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திருமாந்துறை, அத்தியூர் மற்றும் நன்னை ஊராட்சிகளில் தலா ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடங்கள் கட்டும் பணி, ரூ.13.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணி, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி, அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டையில் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும் பணி, ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, ஊராட்சி பொது நிதியின் கீழ் திருமாந்துறை ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 47 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணி, ஆதிதிராவிடர் புதுத் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 50 எண்ணிக்கையில் வீட்டுக் குழாய் இணைப்பு வழங்கும் பணி, ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு முதல் ஓ.எச்.டி டேங்க் வரை மெயின் பைப் லைன், மோட்டார் மற்றும் வயரிங் அமைக்கும் பணி, ரூ.2.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒ.எச்.டி க்கு பைப் லைன் அமைக்கும் பணி, ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மெயின் பைப்லைன், மோட்டார் மற்றும் வயரிங் பணிகள், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மெயின் பைப் லைன் அமைக்கும் பணி, ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கே.புதூர் கிராமத்தில் கே.புதூர் சாலை முதல் நமையூர் சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி, ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பெருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட எறையூர் – நன்னை சாலை முதல் நல்லூர் சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி,

கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் சிறுகுடல், பெருமத்தூர் குடிக்காடு, பென்னக்கோணம், கழனிவாசல் மற்றும் ஓகளுர், அத்தியூர் ஆதிதிராவிடர் பகுதி ஆகிய பகுதிகளில் தலா ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் நன்னை ஊராட்சி கிளியூர் கிராமத்தில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் ஆதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பைப் லைன் அமைத்து 30 எண்ணிக்கையில் வீட்டுக் குழாய் இணைப்பு வழங்கும் பணி, நன்னை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ.2.15 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணி, ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் நன்னையில் தார் சாலை அமைக்கும் பணி, ஓகளுர் ஊராட்சி காந்தி நகரில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 50 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு இன்று அடிஇஅகல் நாட்டப்பட்டது. மேலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் திருமாந்துறை கிராமத்தில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி, ரூ5.92 லட்சம் மதிப்பீட்டில் சிறுகுடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.165.14 லட்சம் மதிப்பீட்டில் தேவையூர் – செந்துறை சாலையை பலப்படுத்தும் பணி, சிறுபாசன ஏரிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.17.77 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரியை புனரமைக்கும் பணி, நன்னை கிராமத்தில் ரூ.46.51 லட்சம் மதிப்பீட்டில் தக்கன் ஏரியை புனரமைக்கும் பணி,

அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கீழப்புலியூர் ஆதிதிராவிடர் மயானத்திற்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் சிறுகூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணினி வகுப்பறை கட்டும் பணி, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முருக்கன்குடி முதல் காருகுடி வரை ரூ.106.57 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, மூலதன முதலீட்டு சிறப்பு திட்டத்தின் கீழ் பென்னகோணம் ஊராட்சியில் ரூ.272.50 லட்சம் மதிப்பீட்டில் பென்னகோணம் – பெருமத்தூர் சாலையை பலப்படுத்தும் பணி என மொத்தம் ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் 34 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

நபார்டு திட்டத்தின் கீழ் கிளியூர் கிராமத்தில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நன்னை கிராமத்தில் ரூ.29.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லி கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால்பண்ணை கட்டிடம், அயோத்திதாசர் பண்டித குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நன்னை ஊராட்சியில் ரூ.7.54 லட்சம் மதிப்பீட்டில் வேப்பூர் சாலை முதல் மாரியம்மன் கோவில் வரை அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.83.13 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் சேர்மன்கள், பிரபாசெல்லப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் அழகு.நீலமேகம், மதியழகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!