Perambalur : Minister Sivashankar laid the foundation stone for new projects worth Rs 4.98 crore in Aladhur Union!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு நேற்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் இலந்தங்குழி ஊராட்சியில் கீழ் ரூ.90.30 லட்சம் மதிப்பீட்டில் இலந்தங்குழி முதல் ஆலத்தூர்- அரியலூர் சாலை இணைப்பு வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், கொட்டரை ஊராட்சியில் ரூ.173.54 லட்சம் மதிப்பீட்டில் பிலிமிசை முதல் கொட்டரை வரை தார் சாலை அமைக்கும் பணியையும், திம்மூர் ஊராட்சியில் கீழ் ரூ.96.40 லட்சம் மதிப்பீட்டில் திம்மூர் முதல் கண்ணனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும்,
மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆதனூர் ஊராட்சியில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் செல்லமுத்து ஏரி முதல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வரை பம்பிங் மெயின்லைன் அமைத்தல் மற்றும் மோட்டார் உடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினையும், கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட அருணகிரி சந்திப்பு சாலையில் ரூ.18.10 லட்சம் மதிப்பீட்டில் 7.5 எச்.பி மோட்டார் உடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் மாரியம்மன் கோயில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும்,
கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.89.75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணியினையும், காரை ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் காரை முதல் மலையப்பன் நகர் வரை உள்ள தார் சாலை மேம்படுத்தும் பணியினையும் என மொத்தம் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் 07 புதிய பணிகளுக்கு இன்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
மேலும், கொளக்காநத்தம், கூத்தூர் மற்றும் காரை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகளையும் வழங்கினார்.
ஆலத்தூர் யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ஓ., சேகர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.