Perambalur: Minister Sivashankar laid the foundation stone for new works even after starting the completed works at Rs. 4.55 crores!

பெரம்பலூர்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.167.95 லட்சம் மதிப்பீட்டில் பெரியம்மாபாளையம் முதல் சீராநத்தம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பொது விழா மேடை அமைக்கும் பணியினையும், கரம்பியம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணயினையும் அமைச்சர் சிவசங்கர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

மேலும், மூங்கில்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், குன்னம் ஊராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ், ரூ.42.6 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் புதிய பைப் லைன், மோட்டார் அறையுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சி, கொளப்பாடி சாலையில், ரூ.37.9 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிய பைப் லைன், மோட்டார் அறையுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினையும், வரகூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் 18.42 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும்,

கொளப்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.91 லட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய கிடங்கு கட்டும் பணியினையும், கொளப்பாடி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.29.97 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், துங்கபுரம் ஊராட்சியில் மெயின் சாலையில் ரூ.15.74 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், துங்கபுரம் ஆதிதிராவிடர் தெருவில் ரூபாய் 8.38 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையம், துங்கபுரம் ஊராட்சி கோவில் பாளையம் அண்ணா நகர் செல்வராஜ் வீடு அருகில் ரூ.10.30 லட்சம் மதிப்பிட்டிலும், மூக்கன் வீடு அருகே ரூ.10.60 லட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையம், கிளியப்பட்டு கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18.42 மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.98 கோடி மதிப்பிலான 16 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் குன்னம் பேருந்து நிலையத்தில், 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் வரகூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.2.72 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஊராட்சி பொது நிதியில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை பம்பு மற்றும் கொளப்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 10.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு தானியக் கிடங்கு மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.57 லட்சம் மதிப்பில் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மைய கட்டிடம், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை மற்றும் துங்கபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 11.97 லட்சம் மதிப்பீட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய குழந்தைகள் நல மையக்கட்டடம் என மொத்தம் ரூ.57.11 லட்சம் மதிப்பீட்டிலான 6 முடிவற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, குன்னம் மற்றும் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் வழங்கினார்.

மேலும் வெண்மணி ஊராட்சி புதுக்குடிசை கிராமத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடமாடும் நியாய விலை கடையை கொடியசைத்து தொடங்கி வைத்து, 161 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்திவாசிய பொருட்களை வழங்கிடும் வகையில் இயக்கப்படவுள்ள நடமாடும் நியாய விலைக் கடையில் இருந்து மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர், வேட்டக்குடி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் சார்பில் வேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் நீர் பாசன மானியத் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!