Perambalur: Miscreants line up in locked houses; 5 pounds in cash for Rs. 5.85 lakhs looted, police investigation!!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சித்தர் உள்ளது. அதனருகில் வசிப்பவர் ஜெகநாதன் மகன் ரெங்கராஜ் (40), போர்வெல் தொழில் செய்து வருகிறார். நேற்று இவர், வேப்பந்தட்டையில் நடக்கும் அக்கா மகள் திருமணத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வந்த ரெங்கராஜ் வீட்டில் வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த 4 பவுன் நகை மற்றும், ரொக்கம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் புகாரின் நேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோப்பநாய் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்:
செட்டிக்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி ராஜம்மாள் (60), சென்னையில் உள்ள அவரது மகனை பார்க்க சென்றுவிட்டார். அவரது வீடும் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில், வீட்டிற்கு வந்த ராஜாம்மாள் பார்த்த போது, வீட்டில் ஒரு பவுன் நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரம் என கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து, அவர் புகார் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர், செட்டிகுளம் பகுதிளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.