Perambalur: MLA Prabhakaran gave a recommendation letter to Collector Grace Pachuau for works worth Rs.3.04 crore under the Constituency Development Fund!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 35 பணிகளுக்கு ரூ.3.0432 கோடிமதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம், எம்.எல்.ஏ பிரபாகரன் பரிந்துரை கடிதங்களை வழங்கினார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் (2024-25) கீழ் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை வட்டத்தில் பாலையூர், மேட்டு மரவநத்தம், விஸ்வகுடி கிராமம், உடும்பியம் ஊராட்சி, விஸ்வகுடி ஆதிதிராவிடர் தெரு, அன்னமங்கலம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி, வண்ணாரம்பூண்டி, வெள்ளுவாடி, காரியனூர், அனுக்கூர், அயன் பேரையூர், அரும்பாவூர் பேரூராட்சி, நெய்க்குப்பை, வாலிகண்டபுரம், பெரியம்மாபாளையம், தேவையூர் ஆகிய கிராமங்களில் சிமெண்ட் சாலைகள், சிறுபாலம், சுற்றுச்சுவர், மின்மோட்டாருடன் கூடிய போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட 21 பணிகளுக்கு ரூ.143.17 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளவும்,

ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட தேனூர், கண்ணாப்பாடி, நத்தக்காடு, து.களத்தூர், அடைக்கம்பட்டி, ஈச்சங்காடு, இரூர் ஆகிய கிராமங்களில் சிமெண்ட் சாலைகள், கழிவுநீர் வாய்க்கால், புதிய பயணியர் நிழற்குடை, தார்சாலை, மின் மோட்டாருடன் கூடிய போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட 08 பணிகளுக்கு ரூ.86.15 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளவும்,

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் நகரம், அம்மாபாளையம், க.எறையூர், மேலப்புலியூர், விளாமுத்தூர் ஆகிய கிராமங்களில் புதிய தார்சாலை அமைத்தல், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், திறந்தவெளி குடிநீர் கிணறு அமைத்தல், முழு நேர பகுதி நியாயவிலைக்கடை அமைத்தல், அரசு பள்ளிக்கு நுழைவாயில் அமைத்தல், உள்ளிட்ட 06 பணிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான பணிகள் என பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 35 பணிகளுக்கு ரூ.304.32 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளவும் தனது பரிந்துரைக்கடிதங்களை கலெக்டரிடம், எம்.எல்.ஏ வழங்கினார். டிஆர்.டி.ஏ திட்ட இயக்குனர் லலிதா உடனிருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!