Perambalur: MLA who went by car, bought a Vote; The Collector solved the complaints of the public by waiting! Kudos to the collector!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தல், ஓ.ஆர்.எஸ் கரைசலால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன், உள்ளிட்ட வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.சி.ஆர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள், குடிநீரில் அதிகளவு சுண்ணாம்பு உள்ளதாகவும், குடிநீரில் உப்பு போன்ற படலம் மிதப்பதாகவும், பாத்திரங்களோடு கொண்டு காண்பித்ததோடு, அதனால், அப்பகுதியில் கிட்னி உள்ளிட்ட பல பாதிப்புக்குள்ளாகி உடல் நலம் குன்றி நோய்வாய்படுவதாக தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கிருந்த பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ பிரபாகரன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். ஆனால், கலெக்டர் கற்பகம் அங்கிருந்த பொதுமக்களின் குறைகளை ஒவ்வொன்றாக தெரிவிக்கும் படி கூறினார். குடிநீரில், உப்பு அதிகாமாக உள்ளதை தெரிவித்ததையொட்டி, அங்கிருந்த பொதுமக்கள் குடிக்கும் தண்ணீர் டம்ளரில் வாங்கி அருந்தி பார்த்தார். பின்னர்.அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய அந்த தண்ணீரை குடிப்பதை தவிர்க்க அந்த ஊராட்சியில் வரும் ஒரு வாரத்திற்குள் ஆர்.ஓ வாட்டர் சிஸ்டம் அமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
பின்னர், கழிப்பிட கழிவுகள் நேரில் சாக்கடையில் கலப்பதாக பொதுமக்கள் தெரிவித்த புகாருக்கு நேரில் சென்று துர்நாற்றம் வீசும் சாக்கடை பகுதியை நேரில் பார்வையிட்டு, அதை ஊராட்சி நிர்வாகம் இடிக்க உத்திரவிட்டார்., அதே கால்வாயில், ரோவர் கல்லூரி மனிதக் கழிவுகள் கலப்பதோடு, அதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். மேலும், சாக்கடை, உள்ளிட்டவை உடனடியாக மேற்கொள்ளவும், கலைஞர் கனவு இல்லத்தில் சேதமான வீடுகளை விடுபடால் சேர்க்கவும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்து அப்பகுதி மக்களிடையே கையெழுத்து பெற்று வைத்துக் கொள்ளவும் உத்திரவிட்டார்.
கல்விக் கடன் கிடைக்காத மாணவரின் பெற்றோர் ஒருவர் கண்ணீர் மல்க குறை தெரிவித்தார். அந்த மாணவர் கல்விக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், படிக்க வைப்பதாகவும், உத்திரவாதம் அளித்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஓட்டு வாங்கிய தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் காரில் ஏறி விட்டார். எங்கிருந்தோ வந்த கலெக்டரம்மா நம் வறுமை நிலையை அறிந்து மனம் உவந்து சேவை செய்வதோடு, ஏழை எளிய மக்கள் மீது, இவ்வளவு அக்கறையுடனும், பொறுமையுடனும் பொதுமக்கள் எப்படி பேசினாலும், புரிந்து கொண்டு, அவர்களுக்கு புரியும் விதத்தில் பதில் அளித்து எளிமையுடன் நடந்து கொள்வதை பார்த்த மக்கள் மனமார கலெக்டர் கற்பகத்தை வாழ்த்தினர்