Perambalur: Mother’s murder son arrested: After 10 days, police investigation revealed!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் – சுகுணா இவர்களது மகன் மாமலைவாசன்(23) எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.
தாமரைக்கண்ணன் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார் தாய் சுகுணா(43) உடன் மாமலைவாசன் வசித்து வந்தார், இந்நிலையில், கடந்த 9 ம் தேதி தாய்க்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரம் அடைந்த மாமலைவாசன் தாய் சுகுணாவை கழுத்தை நெரித்துள்ளார், இதில் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார், அக்கம்பக்கத்தினர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், உடல் நிலை சரி இல்லாமல் இறந்து விட்டார் என கூறி உடலை அடக்கம் செய்துவிட்டனர்.
இந்நிலையில், சுகுணா மரணத்தில் அரும்பாவூர் போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது,
அதனைத் தொடர்ந்து சுகுணாவின் கழுத்தில் இருந்த தடயங்களை வைத்து
மாமலைவாசனிம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்,
போலீசாரின் தீவிர விசாரணையில் மாமலைவாசன் தன்னிடம் சண்டை போட்டதால் ஆத்திரமடைந்து தனது தாய் சுகுணாவை கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாமலைவாசனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பந்தட்டை பகுதியில் இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.