Perambalur MP Parivendar instructs the authorities to complete the work on the Siruvachchur flyover quickly!
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூரில் நடந்து வரும் மேம்பால பணிகளை பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தார் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பரபரப்பான, வாகன போக்குவரத்து அதிகமுகள்ள NH-45 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பணி கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் அறியாமையால் மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அப்போது அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்படவில்லை. சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிகளவில் விபத்து ஏற்பட்டு வந்தது.
பொதுமக்கள் மீண்டும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், சுமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், சிறுவாச்சூர் பகுதியை கடக்கும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் காலதாமதமாக கடக்கும் நிலை உள்ளது. இதனை ஏற்கனவே எம்.பி பாரிவேந்தர் பார்வையிட்டு விரைந்து முடிக்க கோரி அறிவுறுத்தினர்.
இந்நிலையில், மீண்டும் அப்பகுதிக்கு இன்று மாலை வந்த பாரிவேந்தர் மேம்பால பணிகளை பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளிடம், பணிகள் குறித்து கேட்ட போது, இன்னும் 3 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரகுபதி மற்றும் , ஒன்றிய , நகர செயலாளர் ஆர்.சி.ஆர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.