Perambalur: Municipal garbage dump caught fire!
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் ஜமாலிய நகரில், எரிவாயு தகன மேடைக்கு அருகே நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. அங்கிருந்து குப்பைகள் மறுசுழற்சிக்காகவும், மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரிக்க வைக்கப்படுகிறது. அங்கு இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த, பெரம்பலூர் நகராட்சி பணியாளர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.