Perambalur municipality purchases tax without water supply Merchants and the public


பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகம் செய்யாமலேயே உணவுக்கடை நடத்தி வரும் சிறு வணிகர்களிடம் வரியை மட்டும் வசூலித்து கொண்டு, பாரபட்சமாக பெரிய ஹோட்டல்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தனி பைப் லைன் அமைத்து தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளுக்கு தண்ணீர் வினியோகித்து வருவதாக சிறுவணிகர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், ஆங்காங்கே வறட்சி நிலவினாலும், துறைமங்கலம் ஏரிப்பகுதியில் தற்போது நீர்மட்டம் நல்ல நிலையில் உள்ளது. இங்கிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யாமல் தனியாருக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு வழங்குவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

வரி செலுத்தும் பொதுமக்கள், 7000 லிட்டர் தண்ணீரை ரூ.600 முதல் ரூ.800 வரை செலுத்தி டிராக்டர் வீட்டு உபயோகித்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டிய நகராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்காமல் இருக்க அவர்களின் வீடுகளுக்கும் தனி பைப் லைன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் மக்களும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தண்ணீருக்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, வழங்காத தண்ணீருக்கு வரி வசூலிப்பதை நகராட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும், மாவட்ட அதிகாரிகளும் பொதுமக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் லட்சணக்கான ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு போர்கிணறும் மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைக்கப்பட்டது. ஆனால், போர்வெல் போட்டு கமிசனை எடுத்து கொண்ட கவனிப்பாரின்றி கிடக்கிறது. கோடிக்கணக்கில் பொதுமக்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் மக்களின் பணத்தை அதிகாரிகளின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், நகர வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்குமே வரிப்பணத்தை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

பட விளக்கம்: பெரம்பலூர் நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைக்கப்பட்ட போர்வெல் கிணறு பயன்படுத்தப்படாமல் பழாகி வரும் காட்சி… அருகே மின்மோட்டார் அறையும் வீணாகும் காட்சி.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!