Perambalur: Must have receipt for purchases; Sub – collector Gokul instructions!
நுகர்வோர் நலன் பாதுகாக்க, ஆண்டுதோறும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவ பருவத்திலேயே நுகர்வோர் உரிமைகளை தெரிந்துக் கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்து, நுகர்வோர் சங்கங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் நுகர்வோர்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு ரசீது கண்டிப்பாக வாங்கிட வேண்டும்.
மாணவ, மாணவிகளிடம் ஒரு தகவலை தெரிவித்தால், அதிக அளவில் மக்களிடம் சென்றடையும் என்ற காரணத்திற்காகவே, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்திலும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து எடுத்துக்கூறுங்கள், நீங்களும் எதிர்காலத்தில் நல்ல நுகர்வோர்களாக இருங்கள், என தெரிவித்தார்.
பின்னர், கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வரும் பிரவீன்தாஸ் என்ற மாணவனுக்கு ரூ.2,500க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், இரண்டாமிடம் பிடித்த வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயற்பியல் பயின்று வரும் வே.பிரியதர்ஷினி என்ற மாணவிக்கு ரூ.1,500 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், மூன்றாமிடம் பிடித்த சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் சமா பேகம் என்ற மாணவிக்கு ரூ.1,000க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும்,
அதேபோல ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் இலக்கியா என்ற மாணவிக்கு ரூ.2,500 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், இரண்டாமிடம் பிடித்த தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் ஆ.பேன்சி லியோனி என்ற மாணவிக்கு ரூ.1,500 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், மூன்றாமிடம் பிடித்த வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பயின்று வரும் கதிரேசன் என்ற மாணவனுக்கு ரூ.1,000 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சார் ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து நுகர்வோர் மன்றத்திற்காக சிறப்பாக செயல்பட்டு வரும் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பாராட்டி பரிசுத் தொகையாக ரூ.5,000க்கான காசோலையை சார் ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க மாநில தலைவர் எஸ்.கே.கதிரவன், செயலாளர் முனைவர்.அ.செந்தில் குமார் உள்ளிட்ட பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.