Perambalur: National Lok Adalat: 560 cases resolved; Orders issued for Rs. 3,48,41,688/-
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில், அதன் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இதில் பெரம்பலூரில் 3 குழுக்களும், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு குழுவும் அமைக்கப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் பெரம்பலூரில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன், பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் தலைமையில் ஒரு குழுவும் மற்றும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி மற்றும் சார்பு நீதிபதி எஸ் அண்ணாமலை தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு குற்றவியல் வழக்குகளுக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்:1 பிரேம்குமார் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு குற்றவியல் நீதிமன்றம் 1 & 2 நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் நீதிமன்றத்தில் உள்ள வருவாய்த்துறை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் வங்கி வார கடன் வழக்குகள் உட்பட சுமார் 2000/-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதி மன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் வழக்காடிகள் எதிர் வழக்காடிகளை வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 560 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, மோட்டார் வாகன விபத்து காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வார கடன் வழக்கில் உட்பட இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3,48,41,688/- க்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
இதில் பார் அசோசியேசன் செயலாளர் சேகர் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர்கள் அருணன் மற்றும் மணிவண்ணன் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும், வழக்காடிகளும், எதிர் வழக்காடிகளும் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட சட்ட தன்னார்வர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான மகேந்திரா வர்மா செய்திருந்தார்.