Perambalur: New cement road constructed at Kolathur at a cost of Rs.12 lakh: Chairman Krishnamurthy inaugurated.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் குடிநீர் ஏரி அருகே உள்ள தெருவில் சிறு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஆலத்தூர் ஒன்றிய செயலாளரும், சேர்மனுமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் .
மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சுந்தர்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி. ஆர்.சிவசங்கர், சுப்ரமணியன், கிளைச் செயலாளர்கள் துரை மாணிக்கம், பன்னீர்செல்வம் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.