Perambalur: New Director Appointed for Textile Department: Collector Info!

கைத்தறி மற்றும் துணிநூல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு 21.10.2021 அன்று புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறை சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன், ஜவுளித்துறை மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள நலத்திட்டங்களை வலுப்படுத்துவதும், தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு தரப்பினரும் பயன்பெறும் வகையில் புத்தாக்க முயற்சிகளுக்கு வித்திடுவதும் துணிநூல் துறையின் நோக்கமாகும்.

விளம்பரம்:

துணிநூல் துறையின் புதிய இயக்குநராக ஆர்.லலிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஜவுளித்துறை இயக்குநரின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், ஜவுளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்குமிடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகிய முன்னெடுப்புகளின் மூலம் ஜவுளித்துறையில் புதுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  ஜவுளித்தொழிலின் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள துணிநூல்துறை ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு தொடரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிது.
வேகமாக வளர்ந்து வரும் ஜவுளித்தொழிலின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கவும், தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் சங்கங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கவும், ஜவுளிதுறையினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களிடையே தொழில்நுட்ப ஜவுளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
ஜவுளிப்பொருட்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்தும் பொருட்டு பன்னாட்டு வணிக கூட்டாண்மைகளை ஆராய்தல், வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல் மற்றும் மண்டல வாரியாக ஜவுளித்தொழில் நுட்பங்களை வெளிப்படுத்த டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை துணிநூல்துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
மேலும், துணிநூல் துறை மாநிலத்தில் முக்கிய ஜவுளி குழுமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு மண்டல அலுவலகங்களுடன் இயங்கிவருகிறது. ஜவுளித்துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, 04324 – 299 544 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மண்டல துணை இயக்குநர் அலுவலகம், 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோன்றிமலை, கரூர் – 639 005 என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிபப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!