#Perambalur on behalf of farmers near the mazie, manufacturer company established small onion

பெரம்பலூர் அருகே செட்டிக்குளத்தில் விவசாயிகள் சார்பில் மக்காச்சோளம, சின்ன வெங்காய உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வரித்துறையின் ஒத்துழைப்புடன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 கிராமங்களிலிருந்து 777 விவசாயிகளை உள்ளடங்கிய பெரம்பலூர் மாவட்ட மக்காச்சோளம் மற்றும் சின்ன வெங்காய உற்பத்தியாளர் நிறுவனத்தை செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் மத்திய அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் துறையின் பொருளாதார ஆலோசகர் ராஜு மிஸ்ரா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நன்மைக்காக வெங்காயத்திலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இவ்வளாகத்தினுள் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததும் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் வெங்காய மதிப்புக்கூடுதல் செய்யும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தின் மூலமாக கிடைக்கப் பெறும் லாபம் முழுவதும், இந்நிறுவனத்திற்கே அளிக்கப்படும், என தெரிவிக்க்பட்டது.

விவசாயிகளால் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் மேலும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

விவசாயிகள் இடைத் தரகர்கள் இன்றி விற்பனை செய்து அதன்மூலம் கிடைக்கப் பெறும் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நந்தக்குமார், இந்திய பயிர்பதன தொழில் நுட்ப கழகத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை பணியாளர்கள் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!