Perambalur: On behalf of the Lions Association, Diwali clothes and welfare assistance for disabled people!
இன்டர்நேசனல் லயன்ஸ் சங்கங்களின் 324எப் மாவட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் காணச்செய்வோம்-லயன்ஸ் சேவைத்திட்டத்தின் மாவட்ட அமைச்சரவை நெறியாளர் ராஜாராம் முன்னிலையில் வகித்தார். மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்த அவர் தன்னார்வலர்களுக்கும், கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஆளுநர் சவரிராஜ் , முதியோர் இல்லங்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட வர்களின் குழந்தைகள், சமூகசேவை இல்லங்களைச்சேர்நத 813 பேருக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் புரோட்டின் பவுடர் பேக்குகள் ஆகியவை உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான சேவைத்திட்டங்களை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தைச்சேர்ந்த லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் கிறிஸ்டினா கேம்பெல் ஸ்கூனோவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 15 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கை கால்கள், பார்வைத்திறன் இழந்த மாணவர்கள் 70 பேருக்கு புளுடூத் தொழில்நுட்பத்திலான ஒலிப்பதிவு கருவிகளை வழங்கினார். மாவட்ட அவைச்செயலாளர் கருணைக்கடல் டெக்சாஸ் மாகாணத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநரை அறிமுகம் செய்துவைத்து வாழ்த்திப் பேசினார்.
விழாவில் லயன்ஸ் மாவட்ட துணை ஆளுனர் விஜயலட்சுமி சண்முகவேல், மாவட்ட நிர்வாக அலுவலர் டாக்டர் ஸ்டாலின், மண்டலத்தலைவர் செந்தில்குமார், வட்டாரத்தலைவர் ஆராமுரளிதரன் ஆகியோர்வாழ்த்திப்பேசினார்கள்.
லயன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சார்க் ராஜாராம், ரவிச்சந்திரன், நெல்சன் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பி.ஆர்.ஓ., ஆனந்த் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பெரம்பலூர் லயன்ஸ் சங்க தலைவர் முரளி மற்றும் செயலாளர்கள் பொருளாளர் ஆகியோர் செய்திருந்தனர்.